search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரப் பிரதேசம்"

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த ரெயில்வே போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    மதுரா:

    உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா நகரைச் சேர்ந்த சிறுவர்கள் கௌரவ் குமார் (14) மற்றும் கபில் குமார் (14). 10-ம் வகுப்பு படித்து வந்த இருவரும் நண்பர்கள். இவர்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளப்போவதாக வீட்டில் கூறிவிட்டு செல்போன்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

    அப்போது, லட்சுமி நகர் பகுதியில் உள்ள மதுரா - காஸ்கஞ்ச் ஒற்றை தண்டவாளப்பாதை வழியே இருவரும் பப்ஜி விளையாடிக் கொண்டே சென்றதாக தெரிகிறது.

    அப்போது, எதிரே வந்த சரக்கு ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த ரெயில்வே போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஜமுனாபர் காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஷஷி பிரகாஷ் கூறியதாவது:

    மதுராச- காஸ்கஞ்ச் ஒற்றை தண்டவாளப் பாதை அருகே உடல்கள் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்ததில் சிறுவர்கள் உயிரிழந்துக் கிடந்தது தெரியவந்தது.

    மேலும், உடல் அருகே பயன்பாட்டில் உள்ள நிலையில் செல்போன் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதில், பப்ஜி விளையாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
    சிறுவர்கள் இருவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ளப்போவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

    இந்நிலையில், ரெயில் வருவது கூட தெரியாமல், பப்ஜி விளையாட்டில் மூழ்கி ரெயில் மோதி இறந்துள்ளனர்.

    சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×